வவுனியா – தவசியாகுளம் அ.த.க பாடசாலை மாணவர்களின் மாணவர் மாதிரிச் சந்தை!

வவுனியா – தவசியாகுளம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை மாணவர்களின் இணைப் பாடவிதான செயற்பாடுகளின் ஒன்றான மாணவர் மாதிரிச்சந்தை பாடசாலை மண்டபத்தில் நேற்றைய தினம் நடைபெற்றது.

ஆரம்பப் பிரிவு மாணவர்கள் தமது கணித அறிவையும், சமூகத்தில் தொடர்பாடல் விருத்தி, வியாபார நுனுக்கங்கள், என்பவற்றை பாடசாலையிலேயே கற்றுக் கொடுக்கும் பயிற்சியாக குறித்த பாடசாலை மாதிரி சந்தை நிகழ்வு இடம்பெற்றது.

சந்தையில் மாணவர்கள் தமது வீட்டுத்தோட்டத்தில் உற்பத்தியான காய்கறிகள், தேங்காய், கீரைவகைகள், பழங்கள், கைப்பணிப் பொருட்கள் போன்றவற்றை காற்சிப்படுத்தி வியாபாரத்தில் ஈடுபட்டனர்.

சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் தமது விற்பனைப் பொருட்களை வியாபாரம் சொய்த அதேவேளை கிராம மக்களும் சிறுவர்களிடம் பணம் கொடுத்து பொருட்களைக் கொள்வளவு செய்ததை காணமுடிந்தது.

பாடசாலை மாணவர்களின் குறித்த செயற்பாடுகளுக்கு ஆசிரியர்கள், பெற்றோர் கூடுதல் ஆதரவை வழங்கியிருந்தனர்.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!