நல்லாட்சியில் பதுகாப்பு பலவீனம் ஆகிவிட்டது – மஹிந்த!!

30 வருட கால யுத்தத்தை நிறைவு செய்து, குண்டு வெடிப்புக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த போதிலும், தற்போது நல்லாட்சி அரசாங்கத்தின் கவனயீன ஆட்சியினால், மீண்டும் குண்டுகள் வெடிக்கின்ற நாடாக இலங்கை மாறியுள்ளதாக, எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டம், நேற்று மாலை குருநாகல் நிக்கவரெட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற போது இவ்வாறு குறிப்பிட்டார்.

நாட்டில் 30 வருடங்களாக இருந்த யுத்தம், கன்னி வெடிகள் மீட்பு, குண்டுகள் வெடிப்பு என்பவற்றை நாங்கள் நிறுத்தினோம். இன்று என்ன ஏற்பட்டுள்ளது?
ஏப்ரல் 21ஆம் திகதி தேவாலயங்களில் குண்டுகள் வெடித்தன, ஆலயங்களில் மக்கள் பலியாகினார்கள்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் தலைவர்களுடைய இல்லங்களில் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக, பத்திரிகைகளில் இன்று செய்திகள் வெளியாகி வருகின்றன. நேற்றும்கூட கிளைமோர் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக செய்தி கிடைத்துள்ளது.

நாட்டை மீண்டும் பழைய நிலைமைக்கு தள்ளிவிட்டுள்ளனர். விடுவித்துப் பெற்றுக்கொண்ட நாடு இனறு ஆட்சியாளர்களின் கவனயீனத்தினால் பின்நோக்கி நகர்ந்துள்ளது.

இராணுவ சிப்பாய்கள் மீது பழிவாங்கினார்கள். புலனாய்வு அதிகாரிகளை சிறைவைத்தார்கள். அவற்றின் பிரதிபலனே இன்று அனுபவிக்கின்றோம்.
பிரச்சினையை தீர்ப்பதற்கு அரசாங்கம் தயாராகுவதில்லை.

அவற்றை வைத்துக்கொண்டே முன்நகர்ந்துசெல்ல முயற்சிக்கின்றது. 19ஆவது திருத்தத்தை செய்து எம்மை போட்டியிட முடியாத நிலைக்கு தள்ளினார்கள்.
அச்சம் காரணமாக அவர்கள் என்னை தடுத்தனர்.

ஆனால் இன்று கோட்டபாய ராஜபக்சவுக்கு பயப்படுகின்றார்கள். அரசியலமைப்பு திருத்தத்தை செய்ததன் விளைவு என்ன? இரண்டு ஆட்சியாளர்கள் உருவாகினார்கள். ஒருவர் ஜனாதிபதி, இன்னுமொருவர் பிரதமர்.

இவர்களுக்கு இடையிலான மோதலினால் மக்களே பாதிக்கப்பட்டனர். இந்த திருத்தத்தின் ஊடாக ஜனாதிபதியின் அதிகாரம் குறைக்கப்பட்டது.
ரணில் அதிகாரங்களைப் பெற்றார். அதன் பிரதிகூலங்களைக் காண்கின்றோம்.

நாட்டிற்குள் ஸ்திரமற்ற நிலை உள்ளது. நான் நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தை ஆரம்பித்திருக்காவிட்டால், இன்று ஒட்டுமொத்த மக்களும் இருளில்தான் இருந்திருப்பார்கள்.

விமான நிலையம், துறைமுகம், அதிவேக நெடுஞ்சாலைகள் என உருவாக்கினேன். ஆனால் இந்த அரசாங்கம் அவற்றை விற்பனை செய்கிறது. 5 வருடங்களுக்கு ஆட்சிக்கு வந்துவிட்டு பல ஆயிரம் வருடங்களுக்கான மக்களின் பரம்பரை சொத்துக்களை விற்பனை செய்ய இவர்களுக்கு உரிமையில்லை.
இது மக்களுக்கு இழைக்கின்ற குற்றமாகும். என குறிப்பிட்டுள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!