ஆஸ்திரேலியாவில், கொலை வழக்கில் தவறுதலாக சிறையில் அடைக்கப்பட்டவருக்கு ரூ.104 கோடி இழப்பீடு

ஆஸ்திரேலியாவில் மத்திய பொலிஸ்  துணை அதிகாரியாக இருந்த கெலின் வின்செஸ்டர், கடந்த 1989-ம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்டார்.

கெலின் வின்செஸ்டர் கொலை வழக்கில் டேவிட் ஈஸ்ட்மேன் என்பவர் கைது செய்யப்பட்டு, 1995-ம் ஆண்டில் குறித்த நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் டேவிட் ஈஸ்ட்மேன் தனக்கும், இந்த கொலைக்கும் தொடர்பு இல்லையென்று தொடர்ந்து தெரிவித்துவந்தார் வந்தார்.

தீர்ப்பை எதிர்த்து 1999 முதல் 2008 வரை மேல்முறையீடு செய்தார். ஆனால் அனைத்து மேல்முறை யீடுகளையும் அந்நாட்டு நீதிமன்றம் நிராகரித்தது. எனினும் தொடர்ந்து ஈஸ்ட்மேன் 2014-ம் ஆண்டும் மீண்டும் மேல்முறையீடு செய்து இருந்தார் .

மனுவை விசாரித்த நீதிபதி, டேவிட் ஈஸ்ட்மேனை குற்றவாளி என நிரூபிப்பதற்காக பொலிஸார் சமர்பித்த ஆதாரங்கள் மிகவும் குறைவானவை என தெரிவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளார் .

இதையடுத்து, குற்றமே செய்யாமல் 19 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தற்காக டேவிட் ஈஸ்ட்மேன் அரசாங்கத்திடம் இழப்பீடு கோரினார். அரசு நிராகரித்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது .

குறித்த சம்பவம் தொடர்பாக டேவிட் ஈஸ்ட்மேன் உயர் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தார் இந்த வழக்கின் இறுதி விசாரணை நேற்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

சிறைவாசம் காரணமாக டேவிட் ஈஸ்ட்மேன் ஒரு குடும்பம் மற்றும் ஒரு தொழிலை பெறுவதற்கான வாய்ப்பை இழந்துவிட்டார் என குறிப்பிட்ட நீதிபதி, அவருக்கு 7 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் 104,868,000 இழப்பீடாக வழங்க அரசுக்கு உத்தரவிட்டுள்ளார் .

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!