சரணடைந்தவர்கள் விடுதலை-கோட்டபாய   

இராணுவத்தினரிடம் சரணடைந்த அனைத்து விடுதலைப் புலி உறுப்பினர்களும் விடுவிக்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷ அறிவிக்கப்பட்டு முதலாவது தடவையாக இன்று ஷங்க்ரிலா விடுதியில் இடம்பெற்று விசேட ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

‘இராணுவத்திடம் சரணடைந்த விடுதலைப் புலிகள் அனைவரும் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர், சரணடைந்தவர்களை காணவில்லை என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை’ எனவும் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்ச இதன்போது தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!