தேசிய ரீதியில் சாதனைப்படைத்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

தேசிய ரீதியில் சாதனைப்படைத்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் நடைபெற்றது.

தேசிய ரீதியில் சாதனைப்படைத்து மாகாணத்திற்கும், மாவட்டத்திற்கும், கல்லூரிக்கும் பெருமை சேர்த்த மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு கல்லூரி அதிபர் கே.பாஸ்கர் தலைமையில் கல்லூரியில் இன்று நடைபெற்றது.

தேசிய ரீதியில் பாடசாலைகளுக்கிடையில் நடாத்தப்பட்ட மென்பந்து கிரிகெட் போட்டியில் பங்குபற்றிய மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி இரண்டாம் இடத்தினை பெற்றுள்ளது.

35 வருடங்களுக்குப் பின் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி மாணவர்களினால் சாதனை படைத்து கல்லூரிக்கு பெருமை சேர்த்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வாக கல்லூரி அதிபர், ஆசிரியர்கள், மாணவர்களின் ஒழுங்கமைப்பில் இன்று நடாத்தப்பட்டது.

இந்நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக சாதனை படைத்த மாணவர்கள் அதிபர் ,ஆசிரியர்கள் ,மாணவர்களினால் ஊர்வலமாக கல்லூரி பிரதான மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டனர்.

இதனை தொடர்ந்து சாதனை படைத்த மாணவர்களுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் ,வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு கல்வி வலயக் உடற்கல்வி உதவிக்கல்விப் பணிப்பாளர் வி.லவக்குமார், உடற்கல்வி ஆசிரியர் ஆலோசகர் கே.ரவீந்திரன், கல்லூரி அபிவிருத்தி சங்க செயலாளர் எந்திரி டி.கோபிநாத், கல்லூரி பழைய மாணவ சங்க உபதலைவர் வைத்தியர் டி.துஷாந்தன் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள், கல்லூரி அபிவிருத்தி குழு உறுப்பினர்கள், கல்லூரி பழைய மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

 

Recommended For You

About the Author: லியோன்

error: Content is protected !!