எடின்புரோ சர்வதேச சோமகன் விருதுக்கான  அலுவலக திறப்பு விழா

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் செயல்படுகின்ற தேசிய இளைஞர் விருது பிரிவின் எடின்புரோ சர்வதேச சோமகன் விருதுக்கான அலுவலகம் இன்று மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டது.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின கீழ் 2017 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற இந்த செயல் திட்டம் தற்போது வடகிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இளைஞர் யுவதிகள் தமது ஒய்வு நேரத்தில் தமது ஆளுமைகளை விருத்தி செய்து தமது திறன்களை வளர்த்தல், உடற்பயிட்சி ஊடாக ஆரோக்கியத்தை பேணுதல், சாகாச பயணம் போன்ற பயிற்சிகளை தொண்டர் அடிப்படையில் சேவைகளை வழங்குகின்ற நிலையமாக அமைகின்றது.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தேசிய இளைஞர் விருது பிரிவின் வடகிழக்கு இணைப்பாளர் கிஷோத் நவரெத்தின ராசா ஒழுங்கமைப்பில் தேசிய பணிப்பாளர் திஸ்ஸ சமரசிங்க தலைமையில் நடைபெற்றது.

தேசிய இளைஞர் விருது பிரிவின் எடின்புரோ சர்வதேச சோமகன் விருதுக்கான அலுவலகம் திறப்பு விழா நிகழ்வில் மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தேசிய இளைஞர் விருது பிரிவின் பிரதி பணிப்பாளர் றோசான் ஜெயசேகர, மட்டக்களப்பு மத்திய கல்வி வலய கல்வி அபிவிருத்தி பிரதி கல்விப்பணிப்பாளர் ரஷ்மியா பானு, மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்ற அலுவலக உத்தியோகத்தர்களான கலாராணி யேசுதாசன், எம்.ஐ.எம்.ரம்சி மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தேசிய இளைஞர் விருது பிரிவின் இளைஞர் யுவதிகள் கலந்துகொண்டனர்.

Recommended For You

About the Author: லியோன்

error: Content is protected !!