சர்ச்சைக்குறிய சூப்பர் ஓவர் விதிமுறையில் மாற்றம்

இங்கிலாந்தில் கடந்த மே மற்றும் ஜூலை மாதம் நடைபெற்ற 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டியில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் இரு அணிகளும் தலா 241 ஓட்டங்கள் பெற்று ( ட்டுரோ) செய்யப்பட்டது . இதனால் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரிலும் இரு அணிகளும் 15 ஓட்டங்கள்  எடுத்து சமநிலை வகித்தன. இதனை அடுத்து இறுதிப்போட்டியில் இரு அணிகளும் அடித்த பவுண்டரிகள் கணக்கிடப்பட்டு அதில் அதிக பவுண்டரி அடித்த இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் இந்த முடிவுக்கு கடும் விமர்சனதுக்குள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்  தற்போது உள்ள சூப்பர் ஓவர் முறையில் மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளது.

இனி சூப்பர் ஓவரில் சமநிலை ஏற்பட்டால் பவுண்டரி அடிப்படையில் வெற்றி முடிவு செய்யப்படமாட்டாது. அதாவது ஐ.சி.சி. 20 ஓவர் மற்றும் ஒருநாள் உலக கோப்பை போட்டியின் அரைஇறுதி மற்றும் இறுதி போட்டியில் சமநிலை ஏற்பட்டால் சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்படும். அதேநேரத்தில் போட்டியில் தெளிவான முடிவு கிடைக்கும் வரை சூப்பர் ஓவர் தொடரும் என ஐ.சி.சி. அறிவித்துள்ளது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!