ஸ்ரீலங்கா சுதந்திரகட்சி 16 உறுப்பினர்கள் சஜித்க்கு ஆதரவு

 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 உறுப்பினர்கள் நேற்று பெல்மடுல்ல கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுடன் இணைந்துள்ளனர்.

ஸ்ரீ.ல.சு.க இரத்னபுரி மாவட்ட செயலாளர் எல்.ஏ.ஜகத்சிரி லியானகே, இரத்னபுரி மாவட்ட தலைவர் கித்சிரி ஹெட்டியராச்சி மற்றும் இரத்னபுரி மாவட்ட பொருளாளர் செல்லடோர் சரத் பாபு, மற்றும் இரத்னபுரி மாவட்ட பிரதி தலைவர் கே.ஏ. குமாரி ஜெயரத்ன சஜித் பிரேமதாசவுடன் இணைந்துள்ளனர் என தெரிவிக்கப்ட்டுள்ளது.

மேலும் பெல்மடுல்ல,எஹெலியகொட பிரதேச சபைகளின் ஸ்ரீ.ல.சு.க உறுப்பினர்கள், ஏ.எஸ்.அசங்கா, மோகன் மஞ்சுலா,புத்த சம்பா, மற்றும் பன்சிலு கணேகம, கே.கே.தேசபிரிய மற்றும் தயானி சிசிர காந்தி ஆகியோர் பெல்மடுல்ல மக்கள் கூட்டத்தில் சஜித் பிரேமதாசவுடன் இணைந்துள்ளனர்.

இரத்னபுரி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும்  ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வேட்பாளர்கள் கருணாரத்ன, சாந்தா டி சில்வா, நிமல் பதிரானா, இஷினி வன்னிநாயகே, அனோமா சந்தானி, பி.ரத்னம் ஆகியோர் கலந்து கொண்டனர். சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!