இல்மனைட் தொழிற்சாலையை எதிர்த்து மக்கள் போராட்டம்!

மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில்  உள்ள கதிரவெளியில் அமைக்கப்பட்டு வரும் இல்மனைட் கனியமணல் தொழிற்சாலை அமைக்கும் திட்டத்தினை நிறுத்தக்கோாி பிரதேச மக்கள்  பிரதேச செயலகத்திற்கு முன்பாக  இன்று கவனயீா்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மக்கள் செறிந்து வாழும் வாகரை பால்சேனை வடக்கு தொடக்கம் வெருகல் வரையான கதிரவெளி, புச்சாக்கேணி, புதுாா், ஆகிய கிராமங்களில் கனிய மணல் அகழ்வு மற்றும் பிாித்தெடுத்தல் தொழிற்சாலையை சுமாா் 10.3 கெக்டயா் நிலப்பரப்பில் அமைக்க திட்டமிடப்பட்டும்   தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்தே மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த செயற்திட்டத்ததை நிறுத்துமாறு பிரதேச செயலாளரிடம் தமது கோரிக்கையினை முன்வைத்து விட்டு, வாகரை வடக்கு பிரதேச சபைக்கு சென்று தமது கோரிக்கைக்கு பதில் வழங்குமாறு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தவிசாளரை கேட்டுக்கொண்டனர்.

இதற்கு ஒரு வாரகால அவகாசம் வழங்குமாறு தவிசாளா் கேட்டுக்கொண்டமைக்கு அமைய போராட்டக்காரா்கள் அவ்விடத்தினை விட்டு வெளியேயறி இல்மனைட் அலுவலகம் அமைந்துள்ள கதிரவெளி பிரதேசத்திற்கு சென்று போராட்டதில் ஈடுபட்டு்ள்ளனா்.

இதன்போது குறித்த அலுவலக பிரதான நுழைவாயிலை உடைத்து உள்நுழைந்தவா்கள் அங்கு கடமையில் இருந்தவா்களை வெளியேறுமாறு கோஷமிட்டனா்.

இதன்போது நிலமையினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் முயற்சியில் வாகரை பொலிசாா் ஈடுபட்டனா்.(சி)

Recommended For You

About the Author: ருத்ரா

error: Content is protected !!