ஜ.தே.முன்னணியால் தனித்து ஆட்சி செய்யமுடியும்: இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்     

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம், அரசியல் அனர்த்தம் ஏற்பட்டதன் பின்னர், ஜக்கியதேசியக் கட்சி தனித்து ஆட்சி செய்து தன்னை நிரூபித்திருப்பதாக இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவு தெரிவித்து, தேர்தல் தொகுதிகளில் அலுவலகங்களை நேற்று
திறந்து வைத்து, உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் ஜக்கிய தேசியக் கட்சியின் அலுவலகங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.


இதனடிப்படையில், சுன்னாகம், கரவெட்டி, சாவகச்சேரி, கோப்பாய் மற்றும் தெல்லிப்பழை ஆகிய இடங்களிலேய அலுவலகங்கள் திறந்து வைக்கப்பட்டன.
குறித்த அலுவலகங்களை கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் திறந்து வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!