மெக்சிகோவில் 14 பொலிஸார் சுட்டு கொலை

மெக்சிகோ நாட்டின் மிச்சோகேன் பிரதேசத்தின் அகுயிலா நகரத்தில் துப்பாக்கி ஏந்திய குழு துப்பாக்கி சூடு நடத்தியதில் 14 பொலிஸார்  உயிரிழந்துள்ளனர்  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் விற்பனையாளர்கள் ஆதிக்கம் செலுத்தும் அகுயிலா நகரத்தில் பிணையக்கை

திகளாக உள்ள பெண் மற்றும் அவரது மகளை மீட்க பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன்போது பொலிஸார் அகுயிலா நகராட்சிக்கு வெளியே உள்ள பிரதான வீதியில் ரோந்து நடவடிக்கைள் ஈடுப்பட்டுக்கொண்டிருந்தப்போது துப்பாக்கி ஏந்திய குழு  பொலிஸாரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியதில்,இரண்டு  ஜீப் ரக வாகனம்   தீ பிடித்து எரிந்துள்ளது.

மேலும் சம்பவத்தில் 14 பொலிசார்கள் உயிரிழந்ததாக மெக்சிகோ பாதுகாப்புதுறை அறிவித்துள்ளது. இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் மேலதிக விசாரனை நடைபெற்று வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!