வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு 2 வருடத்தில் தீர்வு – நாமல்!!

நாட்டிலுள்ள அனைத்துப் பிரச்சினைகளுக்கும், 2 வருடங்களுக்குள் தீர்வு வழங்கப்படும் என, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று, யாழ்ப்பாணம் நீராவியடி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையிலுள்ள இலங்கை வேந்தன் கலைக் கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் இவ்வாறு குறிப்பிட்டார்.

பெரும்பாலான மக்கள், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இதுவரை செய்திராத பல்வேறு அபிவிருத்திகளை செய்வார்கள் என நினைத்து, மக்கள் அனைவரும் சேர்ந்து இந்த ஆட்சியை கொண்டு வந்தார்கள்.

ஆனால் அவர்கள், வடக்கு கிழக்கு மக்களை மாத்திரம் இல்லாமல், நாட்டு மக்கள் அனைவரையும் ஏமாற்றி, அந்த மக்களுடைய ஈடுபாட்டுக்கு மாற்றமாக செயற்பட்டார்கள் என்பதே உண்மையாகும்.

யுத்தத்தின் பின்னர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வடக்கிற்கு பல அபிவிருத்திகளை செய்தார். ஆனால் நல்லாட்சி எனப்படும் ரணிலின் ஆட்சி வந்த பின்னர், அது அப்படியே நிறுத்தப்பட்டு விட்டது.

சம்மந்தனிடன் ஒரு பட்டதாரி, எப்போது எமக்கு வேலை வழங்குவீர்கள் என கேட்டார். அதற்கு அவர் கூறுகிறார், நான் உங்களுக்கு அரசியல் தீர்வை பெற்றுத்தர முயற்சித்துக் கொண்டிருக்கிறேன், அதுவரை எந்தவொரு தொழில் வாய்பயையும் உங்களுக்கு பெற்றுத்தர முடியாது என்று.

அப்படியென்றால் எதிர்க்கட்சியாக இருந்தும், அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டும் கூட, வடக்கு மக்களுடைய பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை என்பது, எமக்கு நன்றாக புலப்படுகிறது.

ஆனால் மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த போது, டக்ளஸ் தேவானந்தா அனுதினம் ஜனாதிபதியிடம் பேசி, வேலையில்லா குறைகளை கூறி, அவர்களுக்குரிய வாய்ப்புக்களை பெற்றுக் கொடுத்தார். ஆனால் துரதிஸ்ட வசமாக, இன்று இந்த பகுதியில் அந்த நிலை இல்லாமல் இருக்கின்றது என்பதை சொல்லத்தான் வேண்டும்.

விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட உர மானியம் இப்போது நிறுத்தப்பட்டிருக்கின்றது. அதனால் விவசாயிகளிடையே பாரிய பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது.
வாழ்க்கையில் விவசாயம் என்பது முக்கிய துறையாக வழங்குகின்றது.

ஆனால் இந்த அரசாங்கம் இந்த நாட்டிலே எவ்வாறான வேலைத்திட்டத்தையும் முன்னெடுக்கவில்லை. அது மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியிலான எந்தவொரு முன்னேற்றகரமான செயலையும் இந்த அரசாங்கம் முன்னெடுக்கவில்லை.

இன்று இந்த பகுதியில் உள்ள மக்கள் கடனாளிகளாக மாறியிருக்கின்றார்கள். அதைவிட இன்று குடி நீர் தட்டுப்பாடு பாரிய அளவில் ஏற்றபட்டுள்ளது.
இப்படியான அனைத்து பிரச்சினைகள் பற்றியும் நாடாளுமன்ற உறுப்பினர் டகளஸ் தேவானந்தா பேசி இருக்கின்றார்.

நீங்கள் எங்ஙனைள நம்புங்கள் இப்டியான அனைத்து பிரச்சினைகளுக்கும் நாங்கள் முழுமையான நடவடிக்கையையும் எடுப்போம் என இந்த சந்தர்ப்பத்தில் கூறிக்கொள்ள விரும்புகின்றோன். என குறிப்பிட்டார்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!