சஜித் வெற்றி பெறுவதை தடுக்க முடியாது : இம்ரான்!!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், சஜித் பிரேமதாச வெற்றி பெறுவதை எவராலும் தடுக்க முடியாது என, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.இம்ரான் தெரிவித்துள்ளார்.

இன்று, திருகோணமலை அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித் அவர்…

சென்ற ஜனாதிபதித் தேர்தலில் வடகிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற மக்களின் வாக்களிப்பு வீதத்தின் மூலமாக, இந்த நாட்டில் பாரிய புரட்சி ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது, மீண்டும் அவ்வாறான புரட்சியை ஏற்படுத்த தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் தீர்மானித்துள்ளனர்.

இவர்களுடைய வாக்குகளை குறைப்பதற்கும், சிதறடிப்பதற்கும் எதிர்கட்சியினால் பல சூழ்சிகள் முன்னெடுக்கப்பட்டிருகின்றது.

கிழக்கிலே சகல மக்களும் ஒரு முடிவை எடுத்திருக்கின்றார்கள், வருகின்ற தேர்தலிலே சஜித் பிரேமதாசவுக்கான ஆதரவை வழங்கப் போவதாக.

இன்று சகல கட்சிகளுடைய செயற்பாடுகளும் முன்னெடுக்கின்ற சந்தர்பத்தில் வடகிழக்கை குழப்புகின்ற, வாக்கு வீதத்தை குறைக்கின்ற செயற்பாடுகளை எதிர்கட்சியினர் முன்னெடுத்து வருகின்றது.

திருகோணமலை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநித்துவப்படுத்துகின்ற சுசந்த புஞ்சிநிலமே சேருவில தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினாலும், அவருடைய செயற்பாடு முழுமையாக மூதூர் தொகுதியில் அவருடைய வருகை செயற்பாடுகளை முன்னெடுத்து, வாக்குகளை குறைப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றார்.

காலி முகத்திடலில் நடாத்தப்பட்ட கூட்டத்தில் திரண்ட மக்களுடய எண்ணிக்கையை பார்க்கின்றபோது, சஜித் பிரேமதாசவின் வெற்றி உறுதியாகிவிட்டது.

முஸ்லிம் கட்சிகளும், தமிழ் கட்சிகம் ஆதரவை வழங்கிக் கொண்டிருக்கின்றன, சென்ற ஜனாதிபதி தேர்தலை விட கூடுதலான வாக்கு வித்தியாசத்தில் கிழக்கு மாகாணம் சஜித் பிரேமதாசாவை ஜனாதியாக்கும் என்பதிலே எந்த சந்தேகமும் கிடையாது. என குறிப்பிட்டர்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!