தோட்டத் தொழிலாளர்களின் அமோக வாக்குகளால் சஜித் வெற்றி பெறுவார் – திகாம்பரம்!!

மலையக மக்களுக்கு வாக்குரிமையை பெற்றுத்தந்த, முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மகன் சஜித் பிரேமதாசவை, மலையக மக்கள் அதிகூடிய வாக்குகளுடன் வெற்றி பெறச் செய்வார்கள் என, மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

இன்று, தேர்தல் பிரசார நடவடிக்கைகளை ஆரம்பித்து வைத்த பின்னர், நுவரெலியா ஹட்டனில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதேவேளை, இந்த ஊடக சந்திப்பில், தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.திலகராஜ் கலந்துகொண்டார்.

இதன் போது கருத்த தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் திலகராஜ்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 32 அம்ச கோரிகைகளை ஐக்கிய தேசிய முன்னணியிடன் முன்வைத்து அதனை ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் மாற்று அணியினருக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்து வருகின்றனர்
அவர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளில் பலவற்றை நாங்கள் ஏற்கனவே நிறைவேற்றி விட்டோம்.

நாங்கள் அவர்களிடம் ஒருவிடயத்தை கேட்க விரும்புகிறோம், ஐக்கிய தேசிய முன்னணியிடம் நீங்கள் முன்வைத்த 32 அம்ச கோரிக்கைகளில் அவர்கள் ஏற்க மறுத்த கோரிக்கைகள் என்ன? அந்த கோரிக்கைகளை எம்மிடம் தாருங்கள் நாங்கள் அவற்றை நிறைவேற்றிக்காட்டுகிறோம்

என்றும் நாங்கள் உங்களுடன் என பதிவை இடும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எப்படி ஏனைய வேட்பாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியது என்று கூற முடியும்? யாருடனும் பேச்சுவார்த்தை நடத்தாமல், நின்ற இடத்திலே நின்று கொண்டு அங்கும் இங்கும் பேச்சுவார்த்தை நடத்தியது போல காட்டிவிட்டு இருந்த இடத்திற்கே தமது ஆதரவை தெரிவிப்பதாக கூறுகின்றனர்.

தமிழ் முற்போக்கு கூட்டணி 10 அம்ச கோரிக்கைகளை தற்போது தயாரித்து வருகின்றது அந்த கோரிக்கைகள் மலையக மக்களுக்கானது மற்றுமன்றி, தேசிய ரீதியிலான விடயங்களை உள்ளடக்கியதான கோரிக்கைகள முன்வைத்தே, சஜித் பிரேமதாஸவிற்கு ஆதவை வழங்குகின்றோம் என தெரிவித்தார்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!