காரைக்கவி கே.பத்மாநந்தனின் நூல் கொழும்பில் வெளியிடப்பட்டுள்ளது!!

கல்வி அமைச்சின் அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை செயற்திட்ட பணிப்பாளரும், காரைக்கவியுமான கே.பத்மாநந்தனின் 10 புத்தகங்களைக் கொண்ட நூல்களின் தொகுதி, கொழும்பு பம்பலபிட்டிய சரஸ்வதி மண்டபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரரியவசம், கௌரவ விருந்தினராக விஷேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சர் கலாநிதி வே.இராதாகிருஸ்ணன், சிறப்பு அதிதிகளாக ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூகவலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அலிசார் மௌலானா, நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய பொருளாதார அலுவல்கள் கமத்தொழில் இராஜாங்க அமைச்சர் அல்ஹாஜ் அமீர் அலி ஸிஹாப்தீன் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், வேலுகுமார், மயில்வாகனம் திலகராஜ் மற்றும் கல்வியியலாளர்கள், புத்திஜீவிகள், எழுத்தாளர்கள், விரிவுரையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நேற்று நடைபெற்ற இந் நிகழ்வில் வத்தளையில் தழிழ் பாடசாலை ஒன்று அமைய காரணமாக இருந்த சமூக சேவகர் மயில்வாகனம் மாணிக்கவாசகம், ‘கல்வி நாவலர’; பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

தொடர்ந்து நூல் வெளியீடு, வெளியீட்டு உரைகள், கட்டுரை மீதான கண்ணோட்டம், ஆய்வு, நூலோர் ஆய்வு நயவுரை, கலை நிகழ்ச்சிகள் என்பனவும் நடைபெற்றன.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!