யாழ், பல்கலை மாணவர்கள் – தமிழ் கட்சிகளின் 5ஆம் கட்ட சந்திப்பு!!

வடக்கு, கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் தமிழ்க் கட்சிகளின் பிரநிதிகளுக்கிடையில் 5ஆம் கட்ட சந்திப்பு தற்போது ஆரம்பமாகியுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு அண்மையிலுள்ள தனியார் விடுதி ஒன்றில், இந்த சந்திப்பு ஆரம்பமாகியுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் தரப்பில் தமிழ்த் தேசியக் கட்சிகளிடையே பொது இணக்கப்பாடொன்றை ஏற்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாணம், கிழக்கு பல்கலைக்கழகங்களின் மாணவர் ஒன்றியங்களின் முயற்சியின் பயனாக மிக நீண்டகாலத்தின் பின் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் உட்பட கட்சிப்பிரமுகர்கள பலர் ஒரே மேசையில் சந்தித்துக் கொண்ட 4ஆம் கட்ட கூட்டமும், இணக்கமேதும் எட்டப்படாமலேயே முடிவடைந்தது.

நேற்று மாலை 5.30 மணிக்கு ஆரம்பமான இச்சந்திப்பு, பின்னிரவு 11.30 மணி வரை மிக நீண்ட நேரம் நடைபெற்றது.

நீண்ட நேரம் இந்தச் சந்திப்பு இடம்பெற்ற போதிலும், இடைக்கால அறிக்கை தொடர்பில் ஒற்றையாட்சி நீக்கப்படவேண்டும் என்னும் விடயத்திலேயே இணக்கப்பாடு எட்டப்படவில்லை.

எனினும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடமும், சர்வதேச சமூகத்திடமும் தமிழர்கள் சார்பில் முன்வைக்கப்பட வேண்டிய சரத்துக்கள் அடங்கிய பொது உடன்படிக்கையில், கட்சிகள் முன்வைத்த திருத்தங்களுடன் இன்று பிற்பகல் ஒப்பமிடுவதற்கு கலந்துகொண்ட கட்சிப் பிரமுகர்களிடையே இணக்கம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது, 5ஆம் கட்ட சந்திப்பு ஆரம்பமாகியுள்ளது.

இச்சந்திப்பில் யாழ்ப்பாணம், கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளுடன், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினரும், ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன், வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஆகியோரும், புளொட் சார்பில் அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்ந்தன், வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன் ஆகியோரும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் அதன் தலைவர் பொ.கஜேந்திரகுமார், செயலாளர் செ.கஜேந்திரன், ஆகியோரும், ரெலோ சார்பில் அதன் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், ஈ.பீ.ஆர்.எல்.எவ் சார்பில் அதன் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஆகியோரும், தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் சி.வி.விக்னேஸ்வரன், க.அருந்தவபாலன் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!