ஜப்பானில் ஹகிபிஸ் புயல் தாக்குதல் : பலி எண்ணிக்கை 35 ஆக உயர்வு

ஜப்பானை ஹகிபிஸ் புயல் நேற்று முன்தினம் கடுமையாக தாக்கியது. தலைநகர் டோக்கியோவுக்கு தென்மேற்கில் உள்ள இசு தீபகற்பத்தில், உள்ளூர் நேரப்படி நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு புயல் கரையை கடந்துள்ளது. இதனால், கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பலத்த காற்றுடன் மழை கொட்டி தீர்த்தது.

பலத்த மழையாலும், சூறைக்காற்றாலும் பல வீடுகள் சேதமடைந்து பொதுமக்கள் அவர்களது உடைமைகளை இழந்துள்ளனர். ஜப்பான் அரசு 27 ஆயிரம் ராணுவப் படைகளை மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக அனுப்பி வைத்துள்ளது.

இப்புயல் பாதிப்பு காரணமாக 19 பேர் உயிரழந்ததாகவும், 12 பேர் காணாமல் போய்விட்டதாகவும் நேற்று தகவல் வெளியாகியுள்ளது. தற்போது, பலி எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளதாகவும், 17 பேர் காணாமல் போனதாகவும் தகவல் வெளியானது.

இப்புயல் தாக்கியதால் சுமார் 3 லட்சத்து 76 ஆயிரம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டும், 14 ஆயிரம் வீடுகளில் போதிய தண்ணீர் வசதி இல்லாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!