பாதுகாப்பான நாடொன்றை உருவாக்குவதே எமது நோக்கம் – கோட்டாபய

பாதுகாப்பானதோர் நாட்டை கட்டியெழுப்புவதே எமது பிரதான நோக்கமாக உள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கடவத்த பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அரசியல் கலாச்சாரத்தை சிறந்த முறையில் முன்னெடுத்து ஒழுக்கமான சமூகமொன்றினை உருவாக்க வேண்டும் , தங்களது சிறந்த கொள்கை காரணமாகவே பல அரசியல் கட்சிகள் எம்மோடு கைகோர்த்துள்ளனர் அத்தோடு சூழ்ச்சிக்காரர்களின் வலையில் சிக்கி அநாகரிகமாக நடந்துகொள்ள கூடாது புலனாய்வு தரப்பினர் உரிய வகையில் செயற்பட அதிகாரங்கள் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த பொதுஜன முன்னணியின் தலைவர் மகிந்த ராஜபக்ச மக்களின் விருப்பத்திற்கு மாறாக நாம் செயற்பட போவதில்லை எனவும் சிறந்த முறையில் நாட்டை நிர்வகிக்க நாங்கள் செயற்படுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!