எதிர்கால ஜனாதிபதி கோட்பாயவே – திஸாநாயக்க!!

எல்பிட்டிய தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் ஜனாதிபதி தேர்தலின் முடிவு தெளிவாக தெரிவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஹட்டன் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்தை சக்திமிக்கதாக்க வேண்டுமாயின் சக்தி வாய்ந்த தலைவர் ஒருவர் இருக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஒரே கொள்கையில் இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதற்கு மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டபாய ராஜபக்ஷ இணையும் அடுத்த அரசாங்கத்திற்கே தகுதி இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!