மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் கல்லூரியில் மாணவ லியோ கழகம்  

மட்டக்களப்பு லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் லியோ கழகத்தின் ஊடாக மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் கல்லூரியில் மாணவ லியோ கழகம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு லயன்ஸ் கழகம் லியோ கழகம் இணைந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள கிராம மட்ட மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளையும், வறுமை கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தினையும் மற்றும் சமூக அபிவிருத்தி போன்ற பல சமூக பணிகளை மேற்கொண்டு வருகின்றது.

மட்டக்களப்பு லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் லியோ கழகத்தின் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலை மட்டத்தில் லியோ கழகங்கள் உருவாக்கப்பட்டு மாணவர்களின் மாணவ தலைமைத்துவம், சமூக செயல்பாடுகள் போன்ற சமூக பணி செயல்பாட்டினை முன்னெடுக்கும் வகையில் கழகங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் மட்டக்களப்பு லயன்ஸ் கழகத்தின் ஆலோசகர் லயன் எல்.ஆர்.டேவிட் ஒழுங்கமைப்பில் மாவட்ட தலைவர் லயன் வி.ஆர்.மகேந்திரன் தலைமையில் முதல் முறையாக மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் கல்லூரியில் லியோ கழகம் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் கல்லூரியில் லியோ கழகம் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக 306 சி 2 மாவட்ட ஆளுநர் லயன் பி.எம்.ஜெ.எப்.பிணர ஜெயவர்த்தன கலந்துகொண்டு மாணவ லியோ கழகத்தினை ஆரம்பித்து வைத்ததுடன் மாணவ லியோ கழக தலைவர் பதவி பிரமாணமும் மற்றும் மாணவ லியோ கழக அங்கததவர்களுக்கு கழக சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் கல்லூரி அதிபர் அருட் சகோதரி சாந்தினி உட்பட மட்டக்களப்பு லயன்ஸ் கழகம் மற்றும் லியோ கழக உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்

Recommended For You

About the Author: லியோன்

error: Content is protected !!