மலையகத்தில் சீரற்ற காலநிலை: வெள்ளத்தில் மூழ்கியது நாவலப்பிட்டி     

மலையகத்தின் பல பகுதிகளிலும் தொடரும் கடும் மழையின் காரணமாக, கண்டி நாவலப்பிட்டி நகர் வெள்ள நீரில்
மூழ்கியுள்ளது.

மலையகத்தில் பிற்பகல் வேளைகளில் கடும் மழையுடன் கூடிய காலநிலை காணப்படுகிறது.

இந்நிலையில் இன்று பிற்பகல் பெய்த கடும் மழையினால் கண்டி மாவட்டத்திலுள்ள நாவலப்பிட்டி நகரம் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது.

நாவலப்பிட்டி நகரில் மூன்று அடி உயரத்திற்கு வெள்ள நீர் காணப்படுவதாக, நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் நாவலப்பிட்டி-கம்பளை பிரதான வீதியின் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கால்வாய்களில் வெள்ள நீர் பெருக்கெடுத்ததன் காரணமாகவே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!