மட்டக்களப்பு முனைக்காடு இராமகிருஷ்ணா விளையாட்டு கழகத்தின் பொன்விழா

மட்டக்களப்பு முனைக்காடு இராமகிருஷ்ணா விளையாட்டு கழகத்தின் 50 வது ஆண்டு பொன்விழா நிறைவினை சிறப்பிக்கும் வகையில் நடாத்தப்பட விடையாட்டு சுற்றுப்போட்டிகளின் இறுதி நேற்று முனைக்காடு இராமகிருஷ்ணா விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெற்றது.

கடந்த மார்ச் மாதம் ஆரம்பிக்கப்பட்டு நாடாத்தப்பட்ட விளையாட்டு சுற்றுப் போட்டிகளின் இறுதி போட்டியான உதைப்பந்தாட்ட போட்டி இன்று நடைபெற்றது.

முனைக்காடு இராமகிருஷ்ணா விளையாட்டு கழகத்தின் 50 வது ஆண்டு பொன் விழாவினை சிறப்பிக்கும் வகையில் நடாத்தப்பட விளையாட்டு போட்டிகளில் கிரிகெட் , கரப்பந்தாட்டம் , எல்லே , ,மற்றும் மட்டக்களப்பு மாவட்ட உதைப்பந்தாட்ட சம்மேளன கழகங்கள் முனைக்காடு, படுவான் பிரதேச கழகங்களுக்கிடையிலான லீக் முறையிலான உதைப்பந்தாட்டம் போட்டிகள் நடாத்தப்பட்டன.

முனைக்காடு இராமகிருஷ்ணா விளையாட்டு கழகத்தின் 50 வது ஆண்டு பொன்விழாவினை சிறப்பிக்கும் வகையில் நேற்று மாலை ஆரம்பமான நிகழ்வில் ஆரம்ப நிகழ்வாக அதிதிகளை விளையாட்டு வீரர்களாலும் ,பாடசாலை சிரார்களாலும் மைதானத்திற்கு அழைத்துவரப்பட்டனர்.

இதனை தொடர்ந்து தேசிய மற்றும் விளையாட்டு கொடிகள் ஏற்றப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் வீரர்கள் அறிமுகப்படுத்தப்பட்டு பொன்விழாவின் சிறப்பு நிகழ்வாக கேக் வெட்டப்பட்டு சமாதான புறாக்கள் பறக்கவிட்டு விளையாட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது.

மட்டக்களப்பு முனைக்காடு இராமகிருஷ்ணா விளையாட்டு கழகத்தின் தலைவர் பு.தனராசா தலைமையில் நடத்தப்பட்ட கழகங்களுக்கிடையில் லீக் முறையிலான உதைப்பந்தாட்ட போட்டிகளில் வெற்றிப்பெற்று இறுதி போட்டிக்கு தெரிவான அரசடி விக்னேஸ்வரா மற்றும் முனைக்காடு இராமகிருஷ்ணா விளையாட்டு கழக அணியனர் மோதிக்கொண்டனர்.

இரு அணிகளுக்கிடையில் நடைபெற்ற இறுதி போட்டியில் ஒன்றுக்கு இரண்டு என்ற கோல் கணக்கில் முனைக்காடு இராமகிருஷ்ணா விளையாட்டு கழக அணியனர் வெற்றிப்பெற்று இராமகிருஷ்ணா விளையாட்டு கழகத்தின் 50 வது ஆண்டு பொன்விழா வெற்றிக்கிண்ணத்தை சுவிகரித்துக்கொண்டது.

மட்டக்களப்பு முனைக்காடு இராமகிருஷ்ணா விளையாட்டு கழகத்தின் 50 வது ஆண்டு பொன்விழா வெற்றிக்கிண்ண விளையாட்டு இறுதி நிகழ்வில் அதிதிகளாக ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் ந.வில்வரெத்தினம், மண்முனை மேற்கு வலயக்கல்வி பணிப்பாளர் உட்பட பல அதிதிகள் கலந்துகொண்டதுடன் நடைபெற்ற விளையாட்டு சுற்றுப் போட்டிகளில் வெற்றிப்பெற்ற வீரர்களுக்கும், இறுதி போட்டியில் விளையாடிய கழக அணியினருக்கும் வெற்றிக்கிண்ணங்களும் மற்றும் பணப்பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

 

Recommended For You

About the Author: லியோன்

error: Content is protected !!