யாழ், சர்வதேச விமான நிலையம்:அர்ஜூன ரணதுங்க, சுரேன் ராகவன் கண்காணிப்பு விஜயம் 

போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் ஆகியோர் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன்,

இந்த அபிவிருத்தி திட்டமானது போருக்குப் பின்னரான பாரிய முன்னேற்றகரமான விடயமாகும்.

புலம்பெயர்ந்துள்ள நம் உறவுகள் மீண்டும் நேரடியாக யாழ் மண்ணில் வந்து தமது உறவுகளை இலகுவாக சந்திப்பதற்கான வழியாக இது அமைகின்றது.

இந்த விமான போக்குவரத்தின்போது தற்போது தமிழ்நாட்டிற்கான 7 விமான சேவைகளை ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதனை வாரத்திற்கு 12 விமான சேவைகளாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ள நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம், எதிர்வரும் 17ஆம் திகதி ஜனாதிபதி மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில், உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!