மன்னாரில் வாக்குரிமை தொடர்பில் விழிப்புணர்வு கருத்தமர்வு 

வடக்கு-கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான நிறுவனத்தின் அனுசரனையுடன் ‘நீதி மற்றும் ஜனநாயகத்தை பாதுகாக்க வாக்குரிமையை பயன் படுத்துவோம்’ எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வு கருத்தமர்வு ஒன்று நடைபெற்றது.

மன்னார் நகர மண்டபத்தில் குறித்த விழிர்ப்புணர்வு கருத்தமர்வு இடம் பெற்றது.

மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான நிறுவனத்தின் தலைவர் ஜாட்சன் பிகிராடோ தலைமையில் இடம்பெற்ற குறித்த விழிர்ப்புணர்வு கருத்தமர்வின்போது, விரிவுரையை கொழும்பு பல்கலைக்கழகத்தின் சர்வதேச சட்டத்துறை சட்ட பீட சிரேஸ்ட விரிவுரையாளர் சட்டத்தரணி என்.எம்.ஹக்கீம் நிகழ்த்தினார்.

இதன்போது மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், இளைஞர், யுவதிகள் என பல நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.

குறித்த விழிர்ப்புணர்வு கருத்தமர்வின்போது வாக்குரிமை தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!