வெற்றி உறுதியாகியுள்ளது:கோட்டாபய ராஜபக்ஷ   

காலி – எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் பொதுஜன பெரமுன வெற்றிபெற்றதன் மூலம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலிலும் வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

யட்டியந்தோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

‘எல்பிட்டிய பிரதேச மக்கள், ஒரு நல்ல தகவலை தேர்தலின் ஊடாக வழங்கியுள்ளதாக கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஒன்றாக பயணத்தை ஆரம்பித்துள்ளதாகவும், இந்த பயணத்தால் தமக்கான வெற்றி உறுதியாகியுள்ளதாகவும் கூறினார்.

இந்த நாட்டின் தேசிய பாதுகாப்பை பலப்படுத்தி, நாட்டை முன்னேற்றுவதுதான் தமது பிரதான கடமை என்ற குறிப்பிட்டள்ள கோட்டாபய ராஜபக்ஷ, இதற்கு அனைத்து மக்களும் தனக்கான ஆணையை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!