நாடளாவிய ரீதியில் 375 தேர்தல் முறைப்பாடுகள்:சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு     

தேர்தலுடன் தொடர்புடைய வன்செயல்கள் மற்றும் சட்ட மீறல்கள் குறித்து கடந்த 8 ஆம் திகதி முதல் 11 திகதி மாலை 4.30 மணி வரையான காலப் பகுதியில், நாடளாவிய ரீதியில் 375 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை கடந்த 11 ஆம் திகதி மாத்திரம் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்தில் வன்செயல்கள் தொடர்பில் 4 முறைப்பாடுகளும், சட்ட மீறல்கள் தொடர்பில் 45 முறைப்பாடுகளும், வேறு முறைப்பாடுகள் நான்குமாக மொத்தமாக 53 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

இதேபோன்று மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்தில் சட்ட மீறல்கள் தொடர்பில் 53 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இது வரையில் தேர்தல் வன்செயல்கள் தொடர்பில் 9 முறைப்பாடுகளும், சட்ட மீறல்கள் தொடர்பில் 360 முறைப்பாடுகளும், 6 வேறு முறைப்பாடுகளுமாக மொத்தமாக 375 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!