வெலிமடையில் மரம் முறிந்து வீழ்ந்து மூவர் உயிரிழப்பு!

வெலிமடை பிரதேசத்தில் குடியிருப்பு ஒன்றின் மீது மரம் முறிந்து வீழ்ந்ததில், மூன்று சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர்கள் 18,14 மற்றும் 10 வயதுடையவர்கள் என குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, மரம் முறிந்து வீழ்ந்ததில் படுகாயமுற்ற 22வயதுடைய நபர் ஒருவர் வெலிமட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வெலிமடைப் பிரதேச சபைக்கு அருகில், சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்ட குடியிருப்பு மீதே மரம் முறிந்து வீழ்ந்ததாக சுட்டிக்காட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!