அரசியல் நலனுக்காகயாழ்.சர்வதேச விமானநிலைய திறப்பு விழாவைபயன்படுத்தக் கூடாது: தேர்தல்கள் ஆணைக்குழு 

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் திறப்பு விழாவை அரசியல்வாதிகள் தமது அரசியல் நலன்களை அடைவதற்காகப் பயன்படுத்திக்கொள்ளக் கூடாது என தேர்தல்கள் ஆணைக்குழு எச்சரித்துள்ளது.

யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத் திறப்பு விழா எதிர்வரும் 17ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள யாழ்ப்பாணம் மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.சி.அமல்ராஜ்,

‘தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த இடத்தை அரசியல்வாதிகள் எவரும் தமது அரசியல் நலனுக்காக பயன்படுத்திக்கொண்டால், அது தேர்தல் சட்ட மீறலாக கருதப்படும்.

எனவே, அவ்வாறு அரசியல் நலனைப் பெறுவதற்காக விமான நிலைய திறப்பு விழாவைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டாம் என அவர்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம்’ எனக் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!