யாழ், சர்வதேச விமான நிலைய திறப்பு விழாவினை முன்னிட்டு, சித்திரப் போட்டி   

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் புதிதாகத் திறக்கப்பட உள்ளதை முன்னிட்டு பாடசாலை மாணவர்களிடையே சித்திரக் கலைப் போட்டியொன்று நேற்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

ஸ்ரீலங்கன் விமான சேவைகள் திணைக்களமும் ஏ.பீ.எஸ் யுனிற்ரெட் நிறுவனமும் இணைந்து நடாத்திய சித்திரப் போட்டியானது, யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் நடைபெற்றது.

இப் போட்டியில் யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள பல்வேறு பாடசாலைகளிலும் கல்வி கற்கும், மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

மாணவர்கள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடாத்தப்பட்டிருந்தன.

இந்தப் போட்டியில் பங்கு பற்றிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டிருந்தன.

இதற்கமைய போட்டியில் பங்குபற்றிய மாணவர்களில் முதலிடத்தினைப் பெறும் மாணவர்களுக்கு பத்தாயிரம் ரூபா பணப்பரிசிலும், இரண்டாம் இடத்தினைப் பெற்றுக்கொள்ளும் மாணவர்களுக்கு 7ஆயிரத்து ஜநூறு ருபா பணப்பரிசிலும், மூன்றாம் இடத்தினைப் பெற்றுக்கொள்ளும் மாணவர்களுக்கு தலா 3ஆயிரத்து ஜநூறு ரூபாவும் பரிசிலாக வழங்கப்படவுள்ளது.

அத்தோடு, போட்டியில் பங்குபற்றிய மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்படவுள்ளன.

இந்தப் போட்டிக்கான பரிசில்கள் வழங்கும் நிகழ்வானது யாழ். சர்வதேச விமான நிலைய திறப்பு விழா நிகழ்வின் போது நடைபெறுமென ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளமை சிறப்பம்சமாகும்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!