தமிழ் மாற்றுத்திறனாளிகள் – ஊடகவியிலாளர்கள் சந்திப்பு!!

தமிழ் மாற்றுத்திறனாளிகள் அமைப்பிற்கும், யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட ஊடகவியிலாளர்களுக்குமான கலந்துரையாடல் ஒன்று, யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்டுள்ளது.

இதன் போது, பாதிக்கப்பட்ட சமூகம் தொடர்பான புரிதலையும், அவர்கள் தொடர்பான விடயங்களையும் வெளிக்கொண்டு வர வேண்டும் என்ற நோக்கோடு, தமிழ் மாற்றுத்திறனாளிகள் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டு வரும் செயற்திட்டங்கள் தொடர்பாகவும், பாதிக்கப்பட்டோர்களது எதிர்கால வாழ்வியல் மாற்றங்கள் குறித்தான விடயங்கள் தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் அமைப்பிற்கும், ஊடகவியிலாளர்களுக்கும் இடையே கலந்துரையாடல் ஒன்றும் நடாத்தப்பட்டது.

கலந்துரையாடலில், யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்ட ஊடகவியலாளர்கள், மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், சமூக சேவைகள் திணைக்கள யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்ட அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இதன் போது பாதிக்கப்பட்டவர்களின் குரல் எனும் சஞ்சிகை வெளியிடப்பட்டதுடன், பாதிக்கப்பட்டவர்களின் குரல் எனும் இணைத்தளத்தளமும், மாற்றுத்திறனாளிகள் அமைப்பினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

சஞ்சிகையின் முதற் பிரதியை சிரேஸ்ர ஊடகவியலாளர் என்.வித்தியாதரன் பெற்றுக் கொண்டதுடன், ஊடகங்களின் செயற்பாடுகள் தொடர்பிலும் கருத்துரை வழங்கினார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!