மட்டு.காஞ்சிரங்குடாவில், சோளம் நடுகை!!

மட்டக்களப்பு மாவட்டம் மண்டபத்தடி விவசாய விரிவாக்கல் பிரிவில் உள்ள, காஞ்சிரங்குடா சில்லிக்கொடியாறு கிராமத்தில், சோளம் செய்கையில் ஏற்படும் படைப்புழு தாக்கம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வும் சோளம் நடுகையும் இன்று நடைபெற்றது.

காஞ்சிரங்குடா பிரிவு விவசாயப் போதனாசிரியர் பி.சகாப்தன் தலைமையில் நடைபெற்ற இன் நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட விவசாய பிரதிப் பணிப்பாளர் வீ.பேரின்பராஜா, மட்டக்களப்பு மத்தி விவசாய பிரிவின் உதவி விவசாயப் பணிப்பாளர் எஸ்.எம்.சலீம், பாடவிதான உத்தியோகத்தர்களான ரூவேசினி மோகனதாஸ், விவேகானந்தராஜா மற்றும் விவசாயப் போதனாசிரியர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பலர் பலர் கலந்துகொண்டனர்.

படைப்புழு தாக்கத்திலிருந்து சோளம் செய்கையை பாதுகாக்கும் வகையில், புதிய முறையில் சோளம் விதை நடும் செயற் திட்டம் இதன்போது விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டதுடன், சோளம் செய்கையில் படைப்புழு தாக்கம் ஏற்படுவதை கட்டுப்படுத்தும் வகையில், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆலோசனைகளும் தெரிவிக்கப்பட்டது.

பயிர்களுக்கு ஏற்படும் நோய்களுக்கு இயற்கையான முறையில், இயற்கையாக கிடைக்கும் பொருட்களைக் கொண்டு தீர்வினை பெற நாம் தவறுகின்றோம். விவசாயிகள் இயற்கையை மறந்து செயற்கையுடன் வாழ தொடங்கியதானாலே நாட்டில் சகல அழிவுகளுக்கும் வழி வகுத்தது. என நிகழ்வில் கலந்துகொண்ட மாவட்ட விவசாய பிரதிப் பணிப்பாளர் வீ.பேரின்பராஜா தெரிவித்தார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!