தமிழ் அரசியல் கைதிகளை நான் விடுவிப்பேன் – டக்ளஸ்!!

கோட்டபாய ராஜபக்ச ஜனாதிபதியானால், தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என, ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இன்று, வவுனியாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் பங்கேற்ற வேளை இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் தேசிய கூட்டமைப்பு எப்பொழுதும் சரியான தீர்மாணங்களை எடுப்பதில்லை, குறிப்பாக தங்களது வாக்கு பலத்தை பாதுகாப்பதற்காகவும், அதிகரிப்பதற்காகவும், சுயலாபங்களை பெற்றுக்கொள்வதற்காவுமே அவர்கள் முடிவுகளட எடுக்கின்றார்களே தவிர மக்கள் நலன் சார்ந்ததாக இல்லை.

முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கோட்டபாய ராஜபக்ச வென்று வருவதை எண்ணி தமிழ் மக்கள் பயப்பட தேவையில்லை என்று ஒரு அறிக்கை ஒன்றினை சமீபத்தில் வெளியிட்டிருந்தார்.

கோட்டபாய ராஜபக்ச வந்தால் தமிழ் மக்களிற்கு நன்மைதான் கிடைக்கும், ஏனெனில் கோட்டபாய ராஜபக்ச மீது சர்வதேச சமூகம் தங்களது பார்வையை கூர்மையாக வைத்திருக்கும், இதன் காரணமாக அவர் பிழை விட மாட்டார் என்றும் அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

நான் தமிழ் அரசியல் கைதிகளை வெகு விiவில் விடுவிப்பேன் என்ற உத்திரவாதத்தை தருகிறேன். நாளை நான் சொல்லப்போவதில்லை ஆட்சியாளர்கள் ஏமாற்றி விட்டனர், கோட்டபாய ஏமாற்றி விட்டார் என்று.

இவ்விடயம் தொடர்பாக எனது துண்டு பிரசுரத்தில் வெளிப்படுத்தியிருக்கிறேன். கோட்டபாய பதவிக்கு வந்து மறுநாள் விடுதலை செய்வேன் என நான் பொய் சொல்ல மாட்டேன் அது நடைமுறைக்கு சாத்தியமில்லாத ஒரு விடயமாகும். ஆனால் நிச்சயமாக ஆட்சிக்கு வந்த பின் கூடிய விரைவில் அவர்களை விடுவிப்பேன். என குறிப்பிட்டார்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!