எல்பிட்டிய தேர்தலை ஜனாதிபதி தேர்தலுடன் ஒப்பிட வேண்டாம் – தென்னக்கோன்!!

ஜனாதிபதி தேர்தலுக்காக, மக்களின் பிரச்சினைகளை, அதிகாரிகள் மறந்துவிடக் கூடாது என, மத்திய மாகாண ஆளுனர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

இன்று, நுவரெலியா ஹட்டனில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு கருத்து வெளியிட்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர்கள் ஒன்றிணைந்த பின்னர் தான் இந்த தேர்தல் இடம்பெற்றது.
நாம் எடுத்துக் கொண்டால், நாட்டில் இடம்பெறுகின்ற அனைத்து தேர்தல்களில் வெளி வருகின்ற பெறுபேறுகள் எல்பிட்டி பெறுபேறுக்கு சமநிலையாகாது.

நாட்டில் அனைத்து மாகாணங்களிலும் இடம்பெறுகின்ற தேர்தலை போல், தேசிய மட்டத்தில் இடம்பெறுகின்ற தேர்தலை நாம் கணக்கீடு செய்ய முடியாது.

தற்பொழுது நாட்டில் நன்றாக படித்த இளைஞர்கள் இருக்கிறார்கள். ஆகவே அவர்கள் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கும் போது சிந்தித்து வாக்களிப்பார்கள்.

இந்த நாட்டில் இரண்டு பிரதான கட்சிகள் போட்டியிடுகின்றன. எனவே யார் 2019 ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற போகிறார்கள் என மக்கள் தான் தீர்மானிப்பார்கள்.

மத்திய மாகாணத்தில் உள்ள அரச உத்தியோகத்தர்களுக்கு, சுதந்திரமாக செயல்பட அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அண்மையில், அரசியல் ரீதியாக தேர்தல் நடவடிக்கைகளுக்கு, வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் காணப்பட்டன.

இது தொடர்பில் அனைத்து அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கு, எந்த வகையிலும் மக்களுடைய சொத்துக்களை பயன்படுத்துவதை நிறுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நாட்டில் உள்ள அனைத்து அரசியல்வாதிகளும், தேர்தல் நடவடிக்கையில் ஈடுபடும் போது, மாகாண சபையை, முறையாக கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மக்களின் பிரச்சினையானது, சுகாதாரம், பிரதான வீதிகள், மண்சரிவு அபாயம், ஊனமுற்றோர் போன்ற பிரச்சினைகளை கூட தீர்க்க முடியாத நிலை காணப்படுகிறது.

இன்று நுவரெலியா மாவட்டம் முழுவதும், மக்கள் அறிந்து கொள்ள கூடிய பிரச்சினைகள், இதுபோன்ற தேர்தல் காலங்களில் தீர்க்கப்பட வேண்டும்.

ஆளுனர் என்ற அடிப்படையில் எமக்கு இருக்கின்ற ஒரு முக்கிய பொறுப்புதான் மக்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுப்பது.

ஜனாதிபதி தேர்தல் வரும் வரை, மக்களின் பிரச்சினைகளை மறந்துவிடக் கூடாது. மாகாண சபை இல்லை என, அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளாமல் இல்லை.

வழங்கப்பட்டுள்ள நிதிகளுக்கு, ஆளுனர்களின் ஊடாக அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மாகாணத்தை பொறுத்த வரையில், நவம்பர் மாதம் முதல், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட அனைத்து பகுதிகளுக்கும், அபிவிருத்தி பணிகள் நிறைவு செய்யப்படும்.

எமக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பை நாங்கள் சரிவர முன்னெடுத்து வருகிறோம். அந்தவகையில், ஹட்டன் பகுதியில் உள்ள குப்பை பிரச்சினை, ஆசிரியர்களின் பிரச்சினை போன்ற அனைத்து பிரச்சினைகளுக்கும், தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும். என குறிப்பிட்டார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!