அம்பாறையில், 14 தமிழ்க் கிராமங்கள் அழிப்பு : லோகநாதன்!!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு அளிக்கவுள்ளதாக, அகில இலங்கை பொது ஊழியர் சங்க தலைவர் எஸ்.லோகநாதன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்திற்கான, அகில இலங்கை பொது ஊழியர் சங்கத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு, இன்று நடத்தப்பட்டதை தொடர்ந்து இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்…

அம்பாறை மாவட்டத்தில் 14 தமிழ் கிராமங்கள் இன்று காணாமல் போயுள்ளது. இவ்வாறான விடயங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கண்டும் காணாமலும் உள்ளது.

இவ்வாறு பல சந்தர்ப்பங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பு முறையாக கையாளவில்லை. பிரதேச சபை தரம் உயர்த்துதலிலும் அவர்கள் அக்கறை செலுத்தவில்லை.

இவ்வாறான நிலையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுகபோகங்களை அனுவித்து வருகின்றனர்.

அவர்களை நாங்கள் தொடர்புகொண்டால் இப்போது பேச முடியாது நாங்கள் பிசி என்கின்றார்கள். இன்றய நிகழ்விற்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனை அழைத்திருந்தேன். ஆனால் அவர் வருகை தரவில்லை.

இனியும் தமிழ் தேசிய கூட்டமைப்பையோ, சம்பந்தன், சேனாதிராஜா ஆகியோரின் அரசியலையோ போவதில்லை என அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது. (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!