யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு புதிய பதில் அதிபர் நியமனம்!!

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பதில் அதிபராக, கல்வி அமைச்சில் உதவிக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றும் ரட்ணம் செந்தில்மாறன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில், இதுவரை காலமும் பதில் கடமையாற்றி வந்த சதாசிவம் நிமலன், மாணவர் அனுமதிக்காக இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில், புதிய பதில் அதிபர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவனான ஆர்.செந்தில்மாறன், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானமாணி பட்டத்தைப் பெற்றிருப்பதுடன், பட்டப்பின் தகைமையையும் கொண்டவர்.

இலங்கை சட்டக் கல்லூரியில் பயின்று, தகுதி பெற்றதுடன், இலங்கை கல்வி நிர்வாக சேவையிலும் திறமை அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு, கல்வி அமைச்சில், உதவிக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றி வருகிறார்.

கல்வி நிர்வாகம், சட்டம் மற்றும் விளையாட்டுத்துறைகளில் திறமையான தகுதி வாய்ந்த ஒருவர், தங்கள் கல்லூரிக்கு பதில் அதிபராக நியமனம் பெற்றிருப்பது, கல்லூரி சமூகத்தனரிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!