யாழ். அளவெட்டியில், ஆணின் சடலம் மீட்பு!!

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அளவெட்டி பகுதியில், இன்று கிணற்றில் இருந்து ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர், குழமங்காலை சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான, 40 வயதுடைய நடராஜா ஜெயாகரன் என, அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், தெல்லிப்பளை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, நேற்று இரவு, நண்பர்கள் இணைந்து மது அருந்திக் கொண்டிருந்த போது, ஒருவர் கிணற்றில் வீழ்ந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகவும், ஏனையவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர் என, பொலிஸார் தெரிவித்தனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!