கிளியில், ‘பெண்கள் வாழ்வுரிமைக் கழகம்’ அங்குரார்ப்பணம்!!

சிவில் உரிமைகள் மன்றம் எனும் நிறுவனத்தினால், கிளிநொச்சி மாவட்டத்தின் 4 பிரதேச செயலக பிரிவுகளையும் உள்ளடக்கி, ‘பெண்கள் வாழ்வுரிமைக் கழகம்’, இன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.
இந்நிகழ்வு, கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தின் இராசநாயகம் அரங்கில் இடம்பெற்றது.
இதன் போது, பெண்கள் வாழ்வுரிமைக் கழகத்திற்கு, மத்திய குழு 30 பேர் கொண்டதாக தெரிவு செய்யப்பட்டது.
கரைச்சி, கண்டாவளை, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் இருந்து, கிராமிய சிறு குழுக்களை சேர்ந்த பெண்கள் பங்குபற்றியிருந்தனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில், எதிர்வரும் வருடங்களில், பெண்கள் வாழ்வுரிமைக் கழகத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டங்கள், கடந்த காலங்களில் பெண்கள் எதிர்கொண்ட சவால்கள் உள்ளிட்ட பல விடயங்கள், இன்று ஆராயப்பட்டன.
பெண்களுக்கான அமைப்பின் ஊடாக, கிளிநொச்சி மாவட்டத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் வாழ்வாதார முன்னேற்றங்கள், பாதுகாப்பு, வன்முறை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என, நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
பெண்கள் வாழ்வுரிமைக் கழகத்தின் ஊடாக, கிராமங்கள் தோறும் பெண்கள் தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளதுடன், அவர்களுக்கான சட்ட ரீதியான தீர்வுகளையும் காண்பதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!