நுவரேலியா ஹட்டனில், அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் கௌரவிப்பு!!

நுவரெலியா ஹட்டன் கல்வி வலயத்தின் கீழ், கற்பித்தல் பணியில் உயர்வான திறமையை வெளிப்படுத்திய அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள், காரியாலய நிர்வாக பணியில் ஆற்றல்களை வெளிப்படுத்தியவர்களுக்கான கௌரவிப்பு விழா, இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வு, ஹட்டன் வலய கல்வி பணிப்பாளர் ப.சிறிதரன் தலைமையில், ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

பிரதம அதிதிகளாக, மத்திய மாகாண ஆளுனர் கீர்த்தி தென்னகோன். ஊவா மாகாண ஆளுனரும் முன்னாள் மத்திய மாகாண ஆளுனருமான மைத்ரி குணரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.

அத்துடன், மத்திய மாகாண கல்வி பணிப்பாளர் கே.ஏக்கநாயக்க மற்றும் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இதன் போது, தமிழ் சிங்கள மற்றும் காரியால பணியாளர்கள் ஆகிய 86 பேர், பதக்கங்கள் அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.

அத்துடன், விருந்தினர்களும் பரிசில்களும் நினைவுச் சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!