வவுனியாவில், பார்த்தீனியம் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி!!

விவசாய ஊக்குவிப்பு வாரத்தை முன்னிட்டு, பார்த்தீனியம் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி, வவுனியாவில் இன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் அலுவலகத்தின் ஏற்பாட்டில், விழிப்புணர்வு பேரணியும், பார்த்தீனியம் ஒழிப்பு நடவடிக்கையும் இன்று இடம்பெற்றது.

‘மனித ஆரோக்கியம், விவசாயம் சுற்றுச்சூழல், உயிர் பல்வகைமையை காக்க ஒன்றிணைவோம்’ எனும் தொனிப்பொருளில், நிகழ்வு நடத்தப்பட்டது.

இதன் போது, வவுனியா நகரில் இருந்து, தாண்டிகுளம் விவசாய கல்லூரி வரை பேரணி இடம்பெற்றுடன், பேரணியாக சென்றவர்கள், ஏ9 வீதியின் இரு மருங்கிலும் உள்ள பார்த்தீனிய செடிகளை அகற்றியதுடன், விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் வழங்கியிருந்தனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!