அரசியல் நடவடிக்கைகளில் சிறுவர்களை ஈடுபடுத்த வேண்டாம்: தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை

நாட்டில் நடைபெறும் அரசியல் நடவடிக்கைகளில் சிறுவர்களை ஈடுபடுத்த வேண்டாம் என்று தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை அறிக்கை ஒன்றின் மூலம் அனைத்து தரப்பினரிடமும் கேட்டுக்கொண்டுள்ளது.

இது தொடர்பாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அரசியல் நடவடிக்கைகளுக்காக சிறுவர்களை பயன்படுத்த வேண்டாம் என்று தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, அனைத்து அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள் உள்ளிட்ட தரப்பினர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

நாட்டில் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சிறுவர்கள் பல்வேறு செயற்பாடுகளின் ஊடாக அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுவதாக பொது மக்களால் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுமாயின் அது தொடர்பில் 1929 என்ற சிறுவர் உதவி தொலைபேசி இலக்கத்திற்கு அல்லது எழுத்து மூலம் அல்லது தொலைநகல் மூலம் அல்லது மின்னஞ்சல் மூலம் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு உடனடியாக அறிவிக்குமாறு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை கேட்டுக்கொண்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!