நாட்டில் மாலையில் மழை பெய்யும் சாத்தியம்: வானிலை அவதான நிலையம் 

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழைபெய்யக் கூடிய சாத்தியம் உள்ளதாக வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

சப்ரகமுவ, மேல், மத்திய, ஊவா, தென், வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 தொடக்கம் 100 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நாட்டை சூழவுள்ள கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பரப்புகளில் பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, நாட்டை சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 10 தெடக்கம் 30 கிலோ மீற்றர் வரை காணப்படும் என்று வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 70 தொடக்கம் 80 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் பலமான காற்று வீசுவதுடன் குறித்த கடற்பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும் என்று வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!