இந்தியா – மாமல்லபுரத்தில், சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை  இன்று நீக்கம்  

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பை முன்னிட்டு மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை இன்று நீக்கப்பட்டுள்ளது.

இருநாட்டு தலைவர்களின் சந்திப்பும் மாமல்லபுரத்தில் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த 8ஆம் திகதி முதல் சுற்றுலா பயணிகள் குறித்த பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, புராதன சிற்பங்களை சுற்றுலா பயணிகள் பார்வையிடாத வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்ததுடன், வீதியோரங்களில் அமைக்கப்பட்டிருந்த கடைகளும் அகற்றப்பட்டு தற்காலிக தடுப்பு சுவர்கள் அமைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாமல்லபுரத்தில் சீன ஜனாதிபதியை சந்தித்திருந்ததை அடுத்து மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை இன்று நீக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!