ஹற்றனில் பாரவூர்தி விபத்து

ஹற்றன் – பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹற்றன் கொழும்பு பிரதான வீதியில் பாரவூர்தி ஒன்று இன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது.

ஹற்றனில் இருந்து வட்டவலை பகுதியை நோக்கி பயணித்த பாரவூர்தியின், அதிகவேகத்தால் விபத்து இடம்பெற்றதாக ஹற்றன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் பாரவூர்தியில் பயணித்த எவருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என்றும், எனினும் பாரவூர்தி சேதமடைந்ததாகவும் ஹற்றன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரனைகளை ஹற்றன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!