இந்திய மற்றும் தென்னாபிரிக்கா மோதும் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று

இந்திய மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது.

போட்டியில் தமது முதலாவது இன்னிங்சிற்காக துடுப்பாடிய தென்னாபிரிக்க அணி நேற்றை இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவின்போது 3 விக்கட்டுக்களை இழந்து 36 ஓட்டங்களை பெற்றுள்ளது.

முன்னதாக தமது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பாடிய இந்திய அணி 5 விக்கட்டுக்களை இழந்து 601 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில், ஆட்டத்தை இடைநிறுத்தி கொண்டது.

துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பாக அணித்தலைவர் விராட் கோஹ்லி ஆட்டமிழக்காது 254 ஓட்டங்களையும், மயங் அகர்வால் 108 ஓட்டங்களையும் பெற்று கொடுத்தனர்.

இந்த நிலையில், இன்றைய தினம் மூன்றாம் நாள் ஆட்டம் தொடரவுள்ளது.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!