நாளை சஜித்துக்கு ஆதரவாக பதுளையில் மூன்று கூட்டங்கள்

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்பிரேமதாசவை ஆதரித்து நாளை பதுளை மாவட்டத்தில் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கம் ஏற்பாடு செய்துள்ள மூன்று பிரசார கூட்டங்கள் நடைபெறவுள்ளன.

பசறை ,ஆலிஎல, அப்புதளை ஆகிய இடங்களிலேயே இந்த பிரசார கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அரச பெருந்தோட்ட துறை இராஜாங்க அமைச்சரும் தேசிய தோட்டதொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஸ் தெரிவித்தார்.

முதலாவது கூட்டம் காலை 9.30 மணியளவில் பசறையிலும் , பிற்பகல் 1 மணிக்கு ஆலிஎலயிலும் 2 மணிக்கு அப்புதளையிலும் பிரசார கூட்டங்கள் நடைபெறும் என இராஜாங்க அமைச்சர் சுரேஸ் வடிவேல் தெரிவித்தார். இக் கூட்டத்தில் பல அமைச்சர்கள் கலந்துக் கொள்ள உள்ளனர். (சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!