சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங், இந்தியாவிற்கு விஜயம்!!

சீனாவின் பீஜிங்கில் இருந்து, தனி விமானம் மூலம், இந்தியா சென்னை சென்ற சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங்க்கு, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சீன ஜனாதிபதி இன்று பிற்பகல் 1.30 மணியளவில், சென்னை விமான நிலையம் வந்தார்.

விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழர்களின் பாரம்பரிய வழக்கப்படி அவருக்குப் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

சீன ஜனாதிபதியை, விமான நிலையத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தலைமைச் செயலாளர் சண்முகம், டி.ஜி.பி திரிபாதி ஆகியோர் வரவேற்றனர். அத்துடன் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

இந்தியா – சீனா இடையே நல்லுறவை மேம்படுத்த, கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி சீனா சென்று, அந்நாட்டு ஜனாதிபதி ஷி ஜின் பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதன் தொடர்ச்சியாக, சீன ஜனாதிபதி இந்தியா சென்று பேச்சு நடத்த முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியும், சீன ஜனாதிபதியும், மாமல்லபுரத்தில் சந்தித்துப் பேச, இரு நாட்டு அதிகாரிகளும் முடிவு செய்து, கடந்த ஒரு மாதமாக ஏற்பாடுகள் செய்தனர்.

இன்று மாலை 5.00 மணி அளவில், மாமல்லபுரத்தை சென்றடைந்த சீன ஜனாதிபதியை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி வரவேற்றார்.

இந்தியப் பிரதமருடன் இணைந்து, அங்குள்ள வரலாற்றுச் சின்னங்களைப், அவர் பார்வையிட்டார்.
இதன் போது, இரு தலைவர்களுடனும் தூதுக்குழுவினர் பங்கேற்றனர். அத்துடன், கடற்கரை கோவிலில் இந்தியப் பிரதமரும் சீன ஜனாதிபதியும், கலை நிகழ்ச்சியை பார்வையிட்டனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!