மட்டு, காத்தான்குடி கடலில் ஆணின் சடலம் மீட்பு!!

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காத்தான்குடி கடற்கரையில், ஆணின் சடலமொன்று இன்று மாலை கரையொதுங்கியுள்ளது.

புதிய காத்தான்குடி ஆறாம் குறிச்சியிலுள்ள கடற்கரையில் சடலமொன்று கரையொதுங்குவதாக காத்தான்குடி பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து, அங்கு விரைந்த காத்தான்குடி பொலிசார், கடலில் மிதந்த நிலையில் காணப்பட்ட சடலத்தை பொது மக்களின் உதவியுடன் கரைக்கு கொண்டு வந்தனர்.

குறித்த சடலம் 45 இருந்து 50 வயது வரை மதிக்கத்த ஆணின் சடலம் எனவும், இதுவரை சடலம் அடையாளம் காணப்பட வில்லையெனவும், காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகார் டி.ஏ.சிந்திக்க ஐ.பி தலைமையிலான பொலிஸ் குழுவொன்று, இது தொடர்பில் ஆரம்பக்கட்ட விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த சடலம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், காத்தான்குடி பொலிசார் மேலும் தெரிவித்தனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!