‘டெக்னோ ஸ்ரீலங்கா – 2019’ கண்காட்சி இன்று ஆரம்பம்!!

‘டெக்னோ ஸ்ரீலங்கா – 2019’ தேசிய பொறியியல் தொழில்நுட்ப கண்காட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வு, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில், கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க கண்காட்சி மண்டபத்தில், இன்று முற்பகல் இடம்பெற்றது.

கண்காட்சியை திறந்து வைத்த ஜனாதிபதி, அதனை பார்வையிட்டார்.

இலங்கை பொறியியல் சபையினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் இக்கண்காட்சி, இலங்கையில் இடம்பெறும் ஒரேயொரு பாரிய பொறியியல் தொழில்நுட்ப கண்காட்சியாகும்.

‘புதிய பொறியியல் விஞ்ஞானத்தினூடாக பேண்தகு இலங்கையை நோக்கி’ எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இவ்வருட கண்காட்சி, இன்று முதல் மூன்று தினங்கள் நடத்தப்படுகின்றது.

இந்நிகழ்வில், ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தின் தலைவர் குமாரசிங்க சிறிசேன, இலங்கை பொறியியல் சபையின் தலைவர் பேராசிரியர் டி.எம்.பல்லேவத்த, டெக்னோ ஸ்ரீலங்கா – 2019 கண்காட்சி ஏற்பாட்டுக்குழுவின் தலைவர் பேராசிரியர் எஸ்.பி.எஸ்.அபேகோன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!