வவுனியாவில், வடக்கு மாகாண பண்பாட்டு விழா!!

வடக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், பண்பாட்டுப் பெருவிழாவின் முதலாம் நாள் நிகழ்வு, வவுனியா நகர சபை மண்டபத்தில், இன்று நடைபெற்றது.

வடக்கு மாகாணத்தில் இருக்கும் பிரதேச செயலகம் மற்றும் மாவட்டச் செயலகம் போன்றவற்றில், வருடாந்தம் கலை கலாசார பண்பாட்டு விழுமியங்களை மேம்படுத்தும் நோக்குடன், பண்பாட்டுப் பெருவிழா நடைபெற்று வருகின்றது.

பேராசிரியர் நா.சண்முகலிங்கன் தலைமையில் இடம்பெற்ற முதள் நாள் நிகழ்வில், கலை நிகழ்வுகள் மற்றும் சிறப்பு ஆய்வரங்கு, இளங்கலைஞர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு என்பன இடம்பெற்றன.

இன்றைய ஆரம்ப நிகழ்வில், வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம்.கனீபா, பிரதேச செயலாளர் கா.உதயராசா, பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள உதவிப் பணிப்பாளர் சுஜீபா சிவதாஸ், யாழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் நா.சண்முகலிங்கன், கலைஞர் வேல் ஆனந்தன், ஓய்வு நிலை சிரேஸ்ட விரிவுரையாளர் மு.கௌரிகாந்தன் என பலரும் கலந்துகொண்டனர்.

அதேவேளை, இரண்டாம் நாள் நிகழ்வு நாளை இடம்பெறவுள்ளது.

பட்டிமன்றம், கவியரங்கம், பண்பாட்டு ஊர்வலம் கலை நிகழ்வுகள், சிறந்த நூற்பரிசு வழங்கல் நிகழ்வும், கலைக்கு பரிசில் விருது வழங்கல் நிகழ்வும் இடம்பெறவுள்ளன. (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!