திருக்கோவில் கடலில் நீராடிய மாணவன் மாயம் !

அம்பாறை திருக்கோவில் கடலில் நீராடிய மாணவன் திடீரென மாயமாகியுள்ளார்.

குறித்த மாணவன் அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  திருக்கோவில் முறாவோடை பகுதியில் மாணவர்களுடன் கடலில் நீராடிக் கொண்டு இருந்த வேளை, கடல் நீரில் மாயமாகியுள்ளதாக மாணவனின் பெற்றோர் பொலிசில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக சம்பவ இடத்தில் நின்றவர்களிடம் வினவியபோது,  தனியார் வகுப்பிற்குச் சென்றுவிட்டு நண்பர்களுடன் கடலில் விளையாடிக் கொண்டு இருந்த வேளை கடல் நீரில் அள்ளுண்டு சென்றதாக தெரிவித்துள்ளனர்.

சமபவம் தொர்பில் திருக்கோவில் பொலிசார் குறித்த இடத்திற்கு சென்று பார்வையிட்டுள்ளதுடன், சக மாணவர்களை அழைத்து விசாரணைகளை  மேற்கொண்டு வருகின்றனர்.

திருக்கோவில் விநாயகபுரம் 01 கலைமகள் வீதியைச் சேர்ந்த 15 வயதுடைய நிக்ஷன் நிலக்ஷன்என்ற மாணவனே காணாமல் போயுள்ளார்.(சி)

Recommended For You

About the Author: Karthikesu

error: Content is protected !!